Pages

இந்த வலைப்பூவை தொடர்ந்து மு(நு)கரும் அன்பு நெஞ்சங்கள்

Sunday, January 27, 2013

ஓஷோவை பின்பற்றினால் கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை

அண்ணே வணக்கம்ணே !
ஓஷோவை பத்தி கருத்து சொல்ற அளவுக்கு நாம ஜூரி இல்லின்னாலும்  என்னை பத்தி எனக்கு எவ்ளோ தெரியுமோ அந்த அளவுக்கு அவரை பத்தி  புரியும். (இங்கே தெரியும்ங்கற வார்த்தைய யூஸ் பண்ணாததை கவனிங்க)

ஓஷோ எந்த கிரக காரகத்தின் கீழே வருவாருன்னு நம்ம விமல் மெயில் மூலமா கேள்வி கேட்டிருந்தாரு. அவருக்கு பதில் சொல்ற சாக்குல ஓஷோவை பத்தி கொஞ்சம் ஃப்ளாஷ் பேக் பண்ணிக்கலாமேன்னுதான் இந்த விரிவான பதில்.

ஓஷோவை படிச்சதுல அவருக்கும் மற்ற ஹோலிமென்னுக்கும் இடையிலான வித்யாசங்களை ரொம்ப நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சது.


ஓஷோவை வெறுமனே படித்து அவர் குறித்த தகவல்களை   நம் மூளை என்ற கம்ப்யூட்டரின்  இன்னொரு ட்ரைவில்  சேமித்து வைத்துக்கொண்டால்  அவர் ஜஸ்ட் இன்னொரு   சிந்தனையாளர் மட்டுமே.

ஓஷோவை படித்து அவர் காட்டிய வழியை புரிந்து அவ்வழியில் நம் பயணத்தை துவங்கிவிட்டால் நவகிரக காரகமும் அவரில் இருப்பதை உணரலாம்.

அதுமட்டும் அல்ல அவர் சொல்லி வந்த ஏற்றுக்கொள்ளும் தன்மை   நம்மில் முளை விடுமானால் நவகிரகங்களின் பிடியிலிருந்தும் முற்றும் விடுபடலாம்.


ஓஷோ தனித்தன்மையுடன் தனித்து நிற்பதால் -அவரது  ஒளியை பலர் கடன் வாங்கி பிரகாசிப்பதால் அவர் சூரியன் (சூரியன் =தனித்து இயங்குபவர்,சொந்த ஒளி கொண்டவர்)

மனம் - அதன் செயல்பாடு - மனதை என்ன செய்யவேண்டும் என்று  ஆக்யுரேட்டா -சைனிடிஃபிக்கா சொன்னதால அவர் சந்திரன் ( சந்திரன் = மனோகாரகன்)

ஓஷோ தமது முன்னோடிகள் அனைவரிலுமிருந்து வேறுபட்டு புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டு -பழமை வாத கருத்துக்களுடனும் - சமகாலத்தவருடனும் -ஹிப்பாக்ரடிக் அரசுகளோடும் யுத்தம் புரிந்ததால் அவர் செவ்வாய் ( செவ் =புரட்சி,யுத்த காரகன்)

ஓஷோ மேற்கு உலகத்தை பெரிதும் கவர்ந்ததால் ராகு.( ராகு =பிறமொழியினர் ,வெளி நாட்டினர் , நீலக்கண் உடையோர் )

லட்சக்கணக்கானவர்களில் தேடலை விதைத்து அவர்களுக்கு சரியான வழியை காட்டியதால் குரு (குரு=குரு)

அவரது முன்னோடிகள் செக்ஸை ஒரு சாக்கடையாய் கருதி ஒதுக்கி வைக்க அதில் இறங்கி அதுவும் உயிர் வாழ்தலின் பாகமே  என்ற உண்மையை உரக்க கூறி அதை குறித்த புரிதலின்றி  ஆன்மீக முன்னேற்றத்துக்கு வழியே இல்லை என்று அறிவித்து அதில் இறங்கி சுத்திகரித்ததால் அவர் சனி

(சனி = சாக்கடை /தூமை )


தமக்கு முன்னான ஆன்மீக வ்ரலாற்றை -அதன் அத்தனை முரண்பாடுகளையும் மீறி ஒருங்கிணைத்ததால் புதன்  (புதன் =ஒருங்கிணைத்தல்)

அறிவு வேறு ஞானம் வேறு என்பதை  தெளிவு படுத்தி  -  ஞானத்தின் உண்மை நோக்கம் அறிவை துறப்பதே -மீண்டும் குழந்தைகளாய் மாறுவதே - என்றதாலும் 

ஞானம் என்பது எப்போதோ -எங்கேயோ நிகழும் என்று  மற்றவர்கள் சொல்லிவைக்க இங்கே -இப்போதே என்றதாலும்  அவர் கேது ( கேது =ஞான காரகன்)

அவரது ஆடை,அணிகலன், மற்றும் அவர்  வாழ்ந்த சூழலை பொருத்து பார்த்தால் அவர் சுக்கிரன்  (சுக்கிரன் =ஆடம்பரம்)

2 comments: